இந்த நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது.. இதுக்கு ஒரு முடிவு கட்டலனா மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும்-நீதிபதி

By Ajmal Khan  |  First Published Sep 12, 2022, 1:58 PM IST

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம்  அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.  இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என மதுரை உயிர்நீதிமன்றம் எச்சரிக்கவிடுத்துள்ளது.
 


 இலக்கு நிர்ணயித்து மது விற்பனை

தமிழகத்தில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் மது போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை போட்ட முதலமைச்சர்..! ஸ்டாலின் ராஜ்யத்தில் பூஜ்யமே பரிசு- ஆர்.பி உதயகுமார்

டாஸ்மாக் நேரத்தை குறைக்க வேண்டும்

மேலும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் வழங்கப்பட்டன.  

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் தோல்வி...! தலையும் வாலும் புரியாமல் வழிகாட்டும் ஆளுநர்- முரசொலி தலையங்கம்

மது விற்க தடை..?

அதனைப்பார்த்த நீதிபதிகள், " இது போன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம்  அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.  இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விபரங்களைத் திரட்டவும், அரசுத்தரப்பில், இது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

ராகுல் வருகைக்கு பணம் வசூலித்தேனா.?எம்.பி பதவியை ராஜிமானா செய்ய தயாரா? ஜோதிமணிக்கு சவால் விடுத்த காங்.நிர்வாகி

click me!