வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை.. சிறுமி டானியா படிப்பு செலவை அரசே ஏற்கும்.. அமைச்சர் தகவல்

Published : Sep 12, 2022, 01:11 PM IST
வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை.. சிறுமி டானியா படிப்பு செலவை அரசே ஏற்கும்.. அமைச்சர் தகவல்

சுருக்கம்

முக சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.  

ஆவடி வீராபுரத்தை சேர்ந்த தம்பதியினர் ஸ்டீபன்ராஜ் - பாக்யம். இவர்களுக்கு 9 வயதில் டானியா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே சிறுமியின் அறுவை சிகிச்சை அரசு உதவி செய்திட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இதுக்குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். 

மேலும் படிக்க:அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிக்கிச்சை.. முதலமைச்சர் உத்தரவு..

அந்த உத்தரவின் பேரில் கடந்த மாதம் 17 ஆம் தேதி சிறுமியின் குடும்பத்தை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று சந்தித்தார். அவருடன் சென்றிருந்த மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்தனர். அவருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்தார். 

அதன்படி, முகச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவகல்லூரி மருத்துவமனையில்  அறுவை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமி டானியாவிற்கு 31 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் சுமார் 9 மணி நேரம் உயர் தொழில்நுட்ப அதி நவீன முக சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சிறுமி டானியா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க:நீட் தேர்வு தமிழக மாணவர்கள் தோல்வி...! தலையும் வாலும் புரியாமல் வழிகாட்டும் ஆளுநர்- முரசொலி தலையங்கம்

அப்போது அமைச்சர் நாசர், ஆட்சியர் சிறுமிக்கு பூங்கொத்து அளித்து சிறுமியை வாழ்த்தினர். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும். சிறுமியின் குடும்பத்திற்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. சிறுமியின் அறுவை சிக்கிச்சைக்கு செலவான ரூ.15 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

போதைப்பொருள் கலாசாரம் அதிகரிப்பு.. கொடூர சம்பவத்துக்கு திமுக அரசே காரணம்.. பா.ரஞ்சித் ஆவேசம்!
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 23 முதல் தொடக்கம்!