அடுத்தடுத்து காவு வாங்கும் கோவை மேம்பாலம்...! உயிர் பலி வாங்க காரணம் என்ன..?அதிர்ச்சியூட்டம் தகவல்

By Ajmal Khan  |  First Published Sep 12, 2022, 11:03 AM IST

கோவை ராமநாதபுரம் சுங்கம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து விபத்துக்கான காரணம் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது
 


 உயிர் பலி வாங்கும் மேம்பாலம்..?

நவீன உலகத்திற்கு ஏற்ப மக்களும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். அதற்கு ஏற்ப நகரப்புறத்தில் உள்ள கட்டமைப்புகளும் மாற்றப்பட்டு வருகிறது, அதற்க்கு உதாரனமாக கோவை பகுதியில் எங்கு திரும்பினாலும் மேம்பாலங்கள் தான் அதிக அளவில் உள்ளது. அந்தவகையில் கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள ராமநாதபுரம் முதல் ஸ்டாக் எக்சேன்ஞ் வரையிலான 3.15 கிலோ மீட்டர் தொலைவில் ஆன மேம்பாலம் கடந்த ஜூன் 11ஆம் தேதி தமிழுக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த பாலம் திறந்து வைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே இளைஞர் ஒருவர் பாலத்தின் சுங்கம் திருப்பு முனையில் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தது பரப்பரப்பை ஏற்படுத்தியது .இதனையடுத்து சில தினங்களிலேயே  இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக  உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுச்சாலைத்துறையினர் மேம்பாலத்தில் வேகத்தடை அமைத்தனர். 

Tap to resize

Latest Videos

வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையா.? தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் ஆளுநர்களுக்கு ஏற்படும்- முரசொலி எச்சரிக்கை

அச்சமடையும் பொதுமக்கள்

இந்த தொடர் விபத்து காரணமாக இந்த மேம்பாலத்தில் பயணிக்க அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.  மாற்று வழிகளிலும் ஏராளமானோர் பயணிக்க தொடங்கினர். இதனை அடுத்து இந்த பாலத்தை சிறிது காலம் மூடப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனயைடுத்து   பாலம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் பாலம் திறக்கப்பட்ட அடுத்த தினமே அதாவது ஜூலை 11 ஆம் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்  பாலத்தின் மேல்  இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து  உயிரிழந்தார்.  அடுத்து ஏற்ப்பட்ட உயிர்யிழப்பால் மக்கள் மத்தியில் மீண்டும் பயம் அதிகரித்தது. மேம்பாலம் உயிர் பழி வாங்குகிறதாக அப்பகுதி மக்கள் பேச தொடங்கினர்.

மற்றொரு புறம் பாலம் சரியான முறையில் கட்டப்படாத காரணத்தால் விபத்து ஏற்படுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து மீண்டும் அதிகாரிகள் ஆயவு செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆட்சியர் சமீரனும் அடிக்கடி ஏற்படும் விபத்து தொடர்பாக ஆய்வு நடத்தினர்.  ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தொடர் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும், தேவைப்பட்டால் பாலத்தை இடித்து மறுகட்டமைப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பரமக்குடியில் ரயில் எஞ்சின் மீது ஏறிய இளைஞர்... கொடியசைத்தபோது தாக்கிய மின்சாரம்.. பதறவைக்கும் காட்சிகள்

 அதி வேக பயணம் விபத்திற்கு காரணம்

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் சென்னை ஐஐடி என கட்டடவியல் துறை முனைவர் கீதா கிருஷ்ணன் ராமதுரை தலைமையில் ஜூலை 23ஆம் தேதி முழு பாலத்தையும் பாலத்தில் விபத்து நிகழ்ந்த இடங்களையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிபுணர்களின் இந்த ஆய்வாளர்கள்  இந்த பாலத்தில் நிகழ்ந்த பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் அதி வேகமாக வாகனங்களை இயக்கி அதே காரணம் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின்  சீரமைப்பு ஏற்றுக் கொள்ளும் வகையிலே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது உள்ள கட்டமைப்பில் வாகன ஓட்டிகள்  மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் மட்டுமே பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தில்  குறுகலான அபாயகரமான வளைவுகளில் 150 மீட்டருக்கு முன்பாக LED திரையில் வேகத்தைக் குறைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும், வேகமாக வந்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என அறிவுறுத்தப் பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும்  விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழப்பிற்கு காரணமாக அதிவேகமான பய்யணத்தின் போது  பாலத்தில் மோதி தவறி கீழே விழுந்ததே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

எடப்பாடி கோட்டையில் சசிகலா..! இதற்கு அனுமதி வழங்கவே கூடாது... அதிமுக எம்எல்ஏ போலீசில் பரபரப்பு புகார்

click me!