சிக்கியது கடிதம்... கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தோம்... கள்ளக்காதலன் திருமணத்தால் இறந்த ஸ்ரீஜா கடிதம்!

Asianet News Tamil  
Published : Jan 30, 2018, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
சிக்கியது கடிதம்... கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தோம்... கள்ளக்காதலன் திருமணத்தால் இறந்த ஸ்ரீஜா கடிதம்!

சுருக்கம்

The letter we got was like a husband and wife

இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தோம். அவர் என்னை விட்டு பிரிந்து விடுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை, அதனால் எனது பிள்ளைகளையும் கொன்றுவிட்டேன் என பெண் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பின் சிக்கியது கடிதம்.

ஸ்ரீஜா, இவரது கணவர் ரவீந்திரன் கடந்த 3 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். பிரனீத் (8), சதீஸ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த சில வருடங்களாக வீராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.  அப்போது இவருடன் பணிபுரிந்த ரஞ்சித் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. தனிமையில் சந்தித்து இருவரும் காதலை வளர்த்த நிலையில் ரஞ்சித்தின் வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்த்து கொண்டிருந்த விஷயம் அறிந்த ஸ்ரீஜா மிகுந்த கவலையில் இருந்தாராம். இதற்கு ரஞ்சித்துக்கும் உடன்பாடு இருந்ததாம்.

இதனால் ஸ்ரீஜா, ரஞ்சித்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். எனினும் அவர் கேட்காததால் மனமுடைந்தார் ஸ்ரீஜா. தனது கள்ளக் காதலன் ரஞ்சித் தன்னை ஏமாற்றிவிட்டதாக கருதிய ஸ்ரீஜா, தனது இரு மகன்களுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார். அவர்கள் இருவரும் இறந்ததை உறுதி செய்து கொண்ட ஸ்ரீஜா இதுகுறித்து கடிதம் எழுதிவைத்து விட்டு தானும் விஷ ஊசி போட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் ஈரோடு நகரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்வதற்கு முன் ஸ்ரீஜா எழுதி வைத்து உள்ள ஒரு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஸ்ரீஜா எழுதிய அந்த கடிதத்தில்;

என் கணவர் மறைவுக்குப் பிறகு நான் பணிபுரியும் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அவர் என்னை விட்டு பிரிந்து விடுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அவரது ஆதரவு தொடர்ந்து கிடைக்காததால் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். நான் இறந்த பிறகு என் பிள்ளைகள் அனாதையாகி விடக்கூடாது என நினைத்து அவர்களை வி‌ஷ ஊசி போட்டு என்னுடனேயே அழைத்து கொண்டு போகிறேன். இவ்வாறு ஸ்ரீஜா அந்த கடிதத்தில் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்