இனி எல்லை தாண்டி மீன் பிடிக்க முடியாது..! மீனவர்களின் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்த இஸ்ரோ சிவன்..!

Asianet News Tamil  
Published : Jan 30, 2018, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
இனி எல்லை தாண்டி மீன் பிடிக்க முடியாது..! மீனவர்களின் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்த இஸ்ரோ சிவன்..!

சுருக்கம்

isro sivan decided to take action for fisherman

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எப்போதுமே கைது செய்து வரும் செய்தியை கேள்வி  பட்டிருப்போம்.

இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக,புதிய வழிமுறையை  வகுத்துள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்

அதாவது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது, எல்லை தாண்டி செல்லாமல் மீன்பிடிக்க  வழிவகுக்கும் புதிய  கருவியை தற்போது தயாரித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தை சேர்ந்தா சிவன்

இவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  பாராட்டு விழா  நடைபெற்றது இந்த  விழாவில் பேசிய சிவன்  இவ்வாறு  தெரிவித்து உள்ளார்.

நாவிக் (Navig) என்ற புதிய கருவி

இந்த புதிய கருவி மூலம் மீனவர்கள் தாங்கள் கடந்து கொண்டிருக்கும் பாதையை பார்த்தவாறே பயணிக்கலாம்.அதே சமயத்தில் வானிலை மாற்றங்கள் போன்றவற்றையும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இந்த கருவியை தயாரித்து வருகின்றனர்

மேலும், அடுத்து வரும் சில மாதங்களில் ஜி-சேட் 11 செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் பல நன்மைகள்  கிடைக்க  வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்