சர்வதேச காத்தாடி திருவிழா.. மாமல்லபுரத்தில் இன்று தொடக்கம்.. Ocean View- யில் பிரம்மாண்ட ஏற்பாடு..

By Thanalakshmi VFirst Published Aug 13, 2022, 7:43 AM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா இன்று தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவில், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 
 

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா இன்று தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவில், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 

நாட்டின் 75-வது சுதந்திர தினம், வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.   இதை முன்னிட்டு முதல் முறையாக சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது. இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்துக்கொள்ள தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் வந்துள்ளன.

Something amazing is coming to the streets of Chennai!

Are you all ready to enjoy and experience first ever international kite festival at TTDC Ocean View, Mahabalipuram from 13th August - 15th August, 2022. pic.twitter.com/WscibuNeeW

— Tamil Nadu Tourism (@tntourismoffcl)

மேலும் படிக்க:அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை… ரூ.20 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முதலீடு கண்டுபிடிப்பு!!

இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 14 ஏக்கர் பரப்பளவில் ஓஷன் வியூ பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை சமன்படுத்தி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பட்டம் பறக்க விடுதலில் கைதேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு காத்தாடிகளை பறக்கவிட உள்ளனர். இந்த காத்தாடி திருவிழாவைத் காண பொதும்க்கள் பங்கேற்கலாம். பார்வையாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.

 மேலும் குழந்தைகளுக்கு கட்டணம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் 150 ரூபாய் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்று கண்டு ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கவிடப்படவுள்ள ஒவ்வொரு காத்தாடியும் 20 முதல் 25 அடி வரை இருக்கும் என்றும் ஒவ்வொரு அணியும் 10 முதல் 20 காற்றாடிகளைக் கொண்டு வந்துள்ளனர் என்றும் தமிழக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

click me!