தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By Thanalakshmi VFirst Published Aug 13, 2022, 6:25 AM IST
Highlights

இன்று முதல் தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதால, சென்னையிலிருந்து வெளி மாவட்டத்திற்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய நாடு முழுவதும் பொது விடுமுறையாகும். அதுமட்டுமின்றி இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது.

இதனால்  சென்னையிலிருந்து பணியாற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனை கருதியில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் மக்கள் வசதியாக செல்லும் வகையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க:கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்… எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர்!!

அதன்படி, இன்றும் நாளையும் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு ஏற்றவாறு, வெளியூர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க:11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் சொல்லுமா பள்ளிக்கல்வித்துறை?

மதுரை, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் வழக்கமான நாளை விட 3 மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் அதிக கட்ட்ணம் வசூலிக்கப்பட்ட பணத்தை நடத்துநரிடம் பெற்றும், பயணிகளிடம் வழங்கினர். 
 

click me!