சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - வசமாக சிக்கிய பாஜக பிரமுகர்...!

 
Published : Sep 22, 2017, 10:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - வசமாக சிக்கிய பாஜக பிரமுகர்...!

சுருக்கம்

The inquiry has revealed that one of the BJP leaders has been bombarding his own house to divert the issue of occupying the Temple land near Tiruvallur.

திருவள்ளூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியில் ஏற்பட்ட பிரச்சனையை திசை திருப்ப பாஜக பிரமுகர் ஒருவர் தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் பரமானந்தம். மோடியின் தீவிர விசுவாசியான இவர் திருவள்ளூர் மாவட்ட பாஜக தாழ்த்தபட்டோர் அணியின் மாவட்ட செயலாளராக உள்ளார். 

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நேற்று இவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்டது. 

இதில் கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து பரமானந்தம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியில் ஏற்பட்ட பிரச்சனையை திசை திருப்ப பரமானந்தம் தாமே தம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் எத்தனை லட்சம் வாக்காளர்கள்? முழு விவரம் இதோ!
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்