தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை மையம்

By Ajmal KhanFirst Published Jan 29, 2023, 9:33 AM IST
Highlights

வங்ககடலில் தீவிரம் அடைந்து வரும் ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.  இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில ஒருசில இடங்களில் வரும் 31-ம் தேதி முதல் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

தமிழ்நாட்டு பெயரை உள்நோக்கத்தோடு திரித்து வெளியிட்ட மோடி அரசு.! தமிழர்களை இழிவுப்படுத்தும் செயல் -சீமான்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை

இந்தநிலையில், இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றள்ளதாக கூறியுள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ளது.  இதனால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. வட கிழக்கு பருவமழை முடிந்து பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

டாஸ்மாக் பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்தது ஏன்..? சமூகவலைதளத்தில் விமர்சனம்- பதிலடி கொடுத்த ஆட்சியர்

click me!