
கன்னியாகுமரி அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள எல்லைக்கு உட்பட்ட வெள்ளறடையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாராக தேவராஜ் என்பவர் இருந்து வந்தார்.
அந்த ஆலயத்திற்கு ஆராதனைக்காக அப்பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் வந்துள்ளார்.
அப்போது இரண்டு நாட்களாக அந்த மாணவிக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தை கேரளா போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவுச் செய்த கேரள போலீசார், பாதிரியாரை தேடி வந்தனர்.
இதைதொடர்ந்து பாதிரியார் தேவராஜை தலைமறைவானார். இந்நிலையில், கார்க்கோணம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாதிரியார் தேவராஜ் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், பாதிரியாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.