பேக்கரி ஒன்றில் பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அரோமா கேக்ஸ் என்ற பேக்கரியில் இரண்டு பெண்கள் நேற்று முன்தினம் பப்ஸ் வாங்கியுள்ளனர். இதை தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க, பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்துள்ளனர்.
ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும் பேக்கரிக்கு சென்று கெட்டுப்போன பப்ஸை ஏன் விற்றீர்கள் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடைக்காரர்கள் முயன்றும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார். கேரளாவில் சவர்மா சாப்பிட்டதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இது சவர்மா குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சவர்மாவுக்கு அடுத்து பப்சிலும் பிரச்னை வந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஏற்படும் மரணங்களும் உடல் உபாதைகளும் ஏற்படுவதால் அபாய மணியை அடிக்க சுகாதார முறையில் தரமான உணவுகளை மட்டும் சாப்பிட அறிவுறுத்தும் மருத்துவர்கள் நம்நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே நம் உடல்நலத்திற்கு உகந்ததாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. கோரிக்கை மனுவை அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் !