கார் கண்ணாடியை உடைத்து நகை கொள்ளை - பட்டப்பகலில் பயங்கரம்...

 
Published : Sep 15, 2017, 03:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
 கார் கண்ணாடியை உடைத்து நகை கொள்ளை - பட்டப்பகலில் பயங்கரம்...

சுருக்கம்

The incident in the Dindigul district has broken the car glasses on the day of the day and the shadow of 7 shaven jewels has created a shock.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பட்டப் பகலில் கார் கண்ணாடியை உடைத்து, 7 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது குடும்பத்தினருடன் பழனி அருகே உள்ள திருஆவினன்குடி கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். 

அப்போது காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பக்கவாட்டுக் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளிருந்த 7 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜா போலீசாரிடம் புகார் அளித்தார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டப்பகலில் காரின் கண்ணாடியை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!