மகள் கற்பழிக்கப்பட்டதால் பெற்றோர் தற்கொலை...! திருப்பூரில் பரபரப்பு...

Asianet News Tamil  
Published : Oct 15, 2017, 09:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
மகள் கற்பழிக்கப்பட்டதால் பெற்றோர் தற்கொலை...! திருப்பூரில் பரபரப்பு...

சுருக்கம்

The incident has triggered a suicide by a couple of Puducherry couples drinking poison.

புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதியினர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் 15 வயது மகளுடன் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த கடையில் குளிர்பானம் வாங்கி அதில், விஷத்தைக் கலக்கி குடித்துள்ளனர். 

சில நிமிடங்களிலேயே, வாயில் நுரைதள்ளி மயக்கமடைந்து தம்பதியினர் கீழே விழுந்தனர். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் அவர்களது மகள் திருப்பூரில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்த்தனர். 

இதையடுத்து விசாரணையில், அவர்களது மகளின் நண்பர் அவரை கற்பழித்ததால் அவர் கர்ப்பமடைந்ததும், அதை பெற்றோர்கள் கலைத்ததும் தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Fuel Price Hike Protest: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் சிபிஐ(எம்) போராட்டம்!
திரிஷா பற்றி அசிங்கமான பேச்சு... சட்டென வந்த கோபம் - திமுக நிர்வாகியை லெஃப்ட் ரைட் வாங்கிய கனிமொழி !