டெங்குவை விரட்ட நடமாடும் மருத்துவமனைகள்... சென்னையில் தொடங்கியது!

Asianet News Tamil  
Published : Oct 15, 2017, 07:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
டெங்குவை விரட்ட நடமாடும் மருத்துவமனைகள்... சென்னையில் தொடங்கியது!

சுருக்கம்

Hiking hospitals to control dengue

டெங்குவைக் கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனையைச் சென்னை வளசரவாக்கத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று  தொடங்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பச்சிளம் குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை கொத்துக்கொத்தாய் காவு வாங்கி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல் காரணமாக மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். 

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் தற்போது டெங்குவை தடுக்க நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் டெங்குவைக் கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனையைச் சென்னை வளசரவாக்கத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று  தொடங்கிவைத்தார். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தனித்தனியாக நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் கொசு மருந்து அடிக்கப் பயன்படும் இயந்திரங்கள் ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார்.

PREV
click me!

Recommended Stories

Fuel Price Hike Protest: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் சிபிஐ(எம்) போராட்டம்!
திரிஷா பற்றி அசிங்கமான பேச்சு... சட்டென வந்த கோபம் - திமுக நிர்வாகியை லெஃப்ட் ரைட் வாங்கிய கனிமொழி !