அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது..? வெளியான மருத்துவ அறிக்கை

Published : Aug 13, 2023, 08:04 AM ISTUpdated : Aug 13, 2023, 11:09 AM IST
அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது..? வெளியான மருத்துவ அறிக்கை

சுருக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

அன்பில் மகேஷ் உடல் நிலை பாதிப்பு

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை சேலம் வந்தார். அவர் அரசு விழாவில் பங்கேற்று விட்டு மதியம் மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார்.  அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தபோது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

இதனையடுத்து அன்பில் மகேஷை உடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் காரிமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வயிற்று வலி பிரச்சனை மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பெங்களூரு நாராயண இருதாலயா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அமைச்சர் அன்பில் மகேஷ்.. நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி - ஆஞ்சியோ சிகிச்சை நடக்கவுள்ளதாக தகவல்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதி.. ஏன் என்னாச்சு?
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி