ஏ.ஆர்.ரஹ்மானின் ஆசையை நிறைவேற்றும் முதல்வர் ஸ்டாலின்!

Published : Aug 13, 2023, 07:56 AM IST
ஏ.ஆர்.ரஹ்மானின் ஆசையை நிறைவேற்றும் முதல்வர் ஸ்டாலின்!

சுருக்கம்

சென்னையில் விரைவில் உலகத்தரத்தில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பல்வேறு உலக நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார். அந்த வகையில், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், பின்னர் வெளிநாடுகளிலும் அந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டது. சென்னை பனையூரில் இசைக்கச்சேரி நடைபெற இருந்த அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான், “எனது அன்பான நண்பர்களே. மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது அன்புக்குரிய ரசிகர்கள், நண்பர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பிற்காக, அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி இசைக்கச்சேரி நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! ஓய்வூதியம் பெறும் குடும்பங்களும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்கலாம்.!

ஏ.ஆர்.ரஹ்மானின் அந்த ட்விட்டர் பதிவின் கீழ், மதுரையிலிருந்து வந்ததாகவும், இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “வெயில், மழை, போக்குவரத்து நெரிசல், நல்ல வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடனும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, நமது அரசாங்கத்தின் உதவியுடன் இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச தரத்திலான அடுத்த கட்ட உள்கட்டமைப்பு வசதியை சென்னையில் உருவாக்குவோம் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனையும் செய்கிறேன்.” என பதிவிட்டார்.

 

 

இந்த நிலையில், சென்னையில் விரைவில் உலகத்தரத்தில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த நீண்ட நாள் ஆசையை சென்னை விரைவில் நிறைவேற்றும். சென்னை ஈசிஆரில் நிறுவப்படும் #KalaignarConventionCentre, பெரிய அளவிலான கச்சேரிகள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வசதியாக இருக்கும். தனித்துவமான கட்டுமானம், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் இடங்கள் மற்றும் சிறந்த இணைப்புடன் இது நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக இருக்கும்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!