சமையலறையில் பதுங்கி இருந்த கரடி தாக்கியதில் பெண் பலத்த காயம்; கூட்டத்தைப் பார்த்ததும் கரடி தப்பியோட்டம்…

 
Published : Nov 04, 2017, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
சமையலறையில் பதுங்கி இருந்த கரடி தாக்கியதில் பெண் பலத்த காயம்; கூட்டத்தைப் பார்த்ததும் கரடி தப்பியோட்டம்…

சுருக்கம்

The girl was hit by a bear who was hiding in the kitchen Bear catching up after meeting ...

நீலகிரி

உதகையில் வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த கரடி தாக்கியதில் பெண் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள ஆருகுச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைச்செல்வி (50). இவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தகரக் கொட்டகையில் சமையலறை அமைக்கப்பட்டுள்ளது.

கலைச்செல்வி நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டதால் சப்தம் வந்த இடத்திற்குச் சென்றுள்ளார் அவர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த கரடி ஒன்று இவர் மீது பாய்ந்து கடித்துள்ளது. இதனால், அலறிய கலைச்செல்வியின் சத்தத்தைக் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து கலைச்செல்வியை கரடியிடம் இருந்து மீட்டனர்.

பின்னர், கரடி அப்பகுதியில் இருந்து தப்பியோடிவிட்டது. பின்னர், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கலைச்செல்வி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குந்தா வனச் சரக அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதோடு அங்கு கூண்டு வைத்து அக்கரடியைப் பிடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்