
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில் முன்னாள் ஊராட்சி தலைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை என்ற இடத்தில் சென்னையை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது.
அப்போது, எதிரே காத்தான் கடையைச் சேர்ந்த அடையாளச்சேரி முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் (55) மற்றும் அவரது நண்பர் மேக்காவன் (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த வந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய கார், மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேக்காவன் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.