டன் கணக்கில் மொத்தமாக சிக்கிய மீன்கள்; பெரும் மகிழ்ச்சியில் மீனவர்கள்; மதிப்பு ரூ.6 இலட்சமாம்...

 
Published : Feb 05, 2018, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
டன் கணக்கில் மொத்தமாக சிக்கிய மீன்கள்; பெரும் மகிழ்ச்சியில் மீனவர்கள்; மதிப்பு ரூ.6 இலட்சமாம்...

சுருக்கம்

fish in tons in net Fishermen great happiness value of Rs.6 lakhs ...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் விரித்த வலையில் 5 டன் கணக்கில் மீன்கள் சிக்கின. இதன் மதிப்பு ரூ.6 இலட்சம் என்பதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதி மீனவர்கள் 50 பேர் அந்தப் பகுதி மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சிவானந்தம் தலைமையில் நேற்று ஒரு பெரிய படகில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றனர்.

அவர்கள் இராட்சத வலையை வீசிவிட்டு, மீன்கள் சிக்கும் வரை காத்திருந்தனர். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் வீசிய வலையில் ஏராளமான மீன்கள் சிக்கிக் கொண்டன.

படகை கடலுக்குள் இழுத்துச் செல்லும் அளவுகு வலையில் மீன்கள் சிக்கின. மீனவர்கள் கரைப்பகுதியில் உள்ள சக மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்தனர். பிறகு மற்றொரு படகில் கடலுக்குள் வந்த மீனவர்கள் அவர்களுடன் இணைந்து மீன்கள் மாட்டிய இராட்சத வலையை கரை பகுதிக்கு இழுத்து வந்தனர்.

பின்னர் கடற்கரை மணலில் மீன்களை கொட்டினர். கடல் சீற்றம் தணிந்து 3 மாதங்களுக்கு பிறகு அதிக மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 5 டன் எடை கொண்ட அந்த மீன்கள் ரூ.6 இலட்சம் மதிப்பு உடையதாகும்.

மொத்தமாக மீன்கள் பிடிபட்ட தகவலை அறிந்ததும் சென்னையை சேர்ந்த பிரபல ஓட்டல் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து மீன்களை மொத்தமாக வாங்கி சென்றன. கடற்கரையில் மீன்கள் மொத்தமாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பலர் அங்கு வந்து வேடிக்கை பார்க்க கூடினர்.

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!