65 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்..! ஆழ்கடல் மீனவர்கள் உடனே துறைமுகம் திரும்ப உத்தரவு- மீன்வளத்துறை

By Ajmal KhanFirst Published Nov 17, 2022, 1:04 PM IST
Highlights

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை முதல் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

புதிய புயல் சின்னம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு சில நாட்களாக மழையானது நின்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்து. இந்தநிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், மீன்வளத்துறை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ்..! விளக்கம் அளிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அதில், தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் அந்தமான் கடற்பகுதியில் 16.11.2022 முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் எனவும் இது நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நுழைந்து தமிழக கடற்பகுதியில் 18.11.2022 முதல் 21.11.2022 வரை தொடரக்கூடும் எனவும் காற்றின் வேகம் 45கிமீ முதல் 65கிமீ வரை வீசக்கூடும் எனவும் அந்நாட்களில் மீனவர்கள் மீன்படிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 18.11.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனதெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆழ் கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகிலுள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்..! கைது செய்ய வாய்ப்பு..! அலறி துடிக்கும் ராமதாஸ்
 

click me!