தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்திற்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை.! வானிலை மையம் தகவல்

By Ajmal Khan  |  First Published Nov 17, 2022, 9:08 AM IST

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலாக வலுப்பெறவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


தமிழகத்தில் தீவிரமாகும் மழை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக மழையானது பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து. மயிலாடு துறை மாவட்டம் சீர்காழியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்த்து. ஒரே நாளில் 44 செமீ மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு சில தினங்களாக மழையின் தாக்கமு முழுவதுமாக குறைந்துள்ளது. இதனையடுத்து சூரியன் தலைகாட்ட தொடங்கிய நிலையில் பொதுமக்கள் தங்களது இயல்பான பணிகளை செய்ய தொடங்கினர்.

Tap to resize

Latest Videos

Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இன்று இந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் பவர் கட்..!

மீண்டும் மழை எச்சரிக்கை

இந்த நிலையில் மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வகையில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!!

click me!