பொதுமக்களுக்கு குட் நியூஸ்..! மெட்ரோ ரயில், பஸ், மின்சார ரயில் பயணிக்க ஒரே டிக்கெட்.! மு.க.ஸ்டாலின் ஆலோசனை

By Ajmal KhanFirst Published Nov 17, 2022, 8:19 AM IST
Highlights

சென்னையில் அனைத்து போக்குவரத்திற்கும் ஒரே பயணசீட்டில் பயணிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை போக்குவரத்து

தமிழகத்தில் தலைநகரான சென்னையில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். மக்களின் தேவைக்காக பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை பயன்படுத்து பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு சென்று வருகின்றனர். அப்போது பேருந்தில் இருந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதோ அல்லது மெட்ரோ ரயிலில் இருந்து மின்சார ரயிலில் பயணிக்கும் போதோ ஒவ்வொரு முறையில் பயணசீட்டு எடுக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் காலம் வீணாகும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து பயணத்திற்கும் ஒரே பயணசீட்டில் பயணிக்கும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற நீண்ட காலமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக தமிழக சட்ட பேரவையிலும் ஆலோசனை நடைபெற்றது.

அனைத்து போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட்

இந்தநிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழும கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சென்ன ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தலைவராக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சிஎம்ஆர்எல் , சிஎம்டிஏ , மாநகராட்சி , ரயில்வே , நெடுஞ்சாலை , மாநகரப் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். அனைத்து போக்குவரத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து ஒரே கட்டணத்தில் அனைவருக்குமான  பயணத்தை உறுதிபடுத்தும் வகையில் கூட்டத்தில் திட்டம் உருவாக்க முடிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஆலோசனை

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3.90 லட்சம் சதுரஅடியில், ரூ.365 கோடி செலவில்12 மாடிகளுடன்  சி எம் ஆர் எல் என்பவன் செயல்பட்டு வருகிறது இதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மட்டும் இன்றி ( கும்டா  ) எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அலுவலகமும் அங்கே செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

காலில் விழுந்த வாலிபரை தூக்கி விட்டு.. அடுத்த நிமிடமே அண்ணாமலை என்ன செய்தார் தெரியுமா? வைரல் போட்டோ..!

click me!