தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- ஐயோ சாமி.. கல்யாணம் பண்ண ஏழு நாள்ல என்னை விட்டு போயிட்டியே.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..!
undefined
மணலி:
சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், நெடுஞ்சாழியன் சாலை, எடப்பாளையம், பிள்ளைபுரம், விமலாபுரம்.
அஸ்தினாபுரம் (ராதா நகர்):
புருசோத்தமன் நகர் பகுதி முழுவதும், சுந்தரத்தம்மாள் காலனி, பத்மநாபா நகர், என்ஜிஓ காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், ஸ்ரீரணம் நகர், மாருதி நகர், பஜனை கோயில் தெரு, கங்கையம்மன் நகர், திருப்போரூர் சாலை.
தாம்பரம்:
ராதா நகர், புருசோத்தமன் நகர் முழுவதும், பத்மநாபா நகர், நேதாஜி நகர், மாருதி நகர், திருப்போரூர் ரோடு, கடாரி அம்மன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
வியாசர்பாடி:
மத்தூர், மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், செல்லியம்மன் நகர், பார்த்திபுரம், ஜெயா நகர், ஆவின் குடியிருப்பு, காமராஜர் சாலை, மாதவரம் ஜி.என்.டி. ரோடு, செயின்ட் அனீஸ் பள்ளி, ஷெல் பெட்ரோல் பங்க், பெரிய சாலை தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
பெரம்பூர்:
வில்லிவாக்கம் அகத்தியர் நகர் ஓ பிளாக், குமாரசாமி நகர், பொன்விழா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க திட்டமா? குறைந்த விலையில் பால் விற்பனை செய்வது எப்படி.? பால்முகவர்