கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஜ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும்.
சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதை அடுத்து நாளுக்கு நாள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அததிகரித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. கொசு தொல்லை காரணமாக பல்வேறு காய்ச்சல்களும் பரவுகின்றது. இந்நிலையில், கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஜ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இந்த மெட்ராஸ் பாதிப்பால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஆகும்.
இதையும் படிங்க;- Madras Eye : வேகமெடுக்கும் மெட்ராஸ்-ஐ பரவல்! - தெரிந்துகொள்ள வேண்டிய தடுப்புமுறைகள்!
மெட்ராஸ் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு அந்த நோய் தொற்று பரவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளில் தினசரி 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ் கூறுகையில்;- மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது. மெட்ராஸ் ஐ 5 நாட்களில் குணமடைய கூடியதுதான். அதேநேரத்தில் அலட்சியமாக இருந்தால் கண் பார்வை இழக்க நேரிடும் என கூறியுள்ளார்.
கண் சிவத்தல், அழற்சி போன்றவை சிர நேரங்களில் வேறு விதமான பாதிப்புகளாக இருக்கலாம். ஆகையால், அலட்சியம் காட்டாமல் கண் மருத்துதுவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையில் இருப்பில் உள்ளது. தட்டுப்பாடு ஏற்படவில்லை என்ற நிலை என கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஐயோ சாமி.. கல்யாணம் பண்ண ஏழு நாள்ல என்னை விட்டு போயிட்டியே.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..!