
கொளத்தூர்
சேலத்தில் உள்ள பகுதிகளில், நடக்கவிருந்த எருதாட்டத் திருவிழா முதியவரின் இறப்பால் ஒத்திவைக்கப்பட்டது. இறந்தவருக்கு மரியாதை செலுத்துவதே முதல் பணி என்றும், திருவிழா அப்புறம்தான் என்று மக்கள் இந்த முடிவை எடுத்தனர்.
கொளத்தூர், கோல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து, பொறையூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று எருதாட்டம் திருவிழா நடக்க இருந்தது.
இந்த எருதாட்டத்திற்காக மக்கள் கோவில் வளாகத்தைச் சுத்தம் செய்து, தோரணம் கட்டி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருந்தனர்.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து காளைகளை அழைத்து வர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
திருவிழா நடக்கவிருந்த பொறையூரில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதால் எருதாட்டத்தை, கிராம மக்கள், ஒத்தி வைத்தனர்.
இந்த திடீர் மாற்றத்தால் சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எனினும், ஒரு முதியவரின் இறப்பின்போது, திருவிழாக்களை நடத்தக்கூடாது என்றும், இறந்தவருக்கு மரியாதை செய்வதே சரி என்றும் மக்கள் கருதி அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.