எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 26-ஆம் தேதி போராட்டம் உறுதி…

 
Published : Feb 06, 2017, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 26-ஆம் தேதி போராட்டம் உறுதி…

சுருக்கம்

தஞ்சாவூர்,

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 26-ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தஞ்சை மாவட்ட தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சை மாவட்ட தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணி முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

“பணி நிரந்தரம் இல்லை என்கிற பட்சத்தில் காலவரையறையுடன் கூடிய முழு நேர ஆசிரியர் பணி வழங்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

10 கிலோ மீட்டர் எல்லைக்குள் பணியாற்றும் வகையில் பொதுமாறுதல் செய்ய வேண்டும்.

இறந்து போன பகுதி நேர ஆசிரியர் குடும்பங்களுக்கு குடும்பநல நிதியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணிக்கொடையும் வழங்கப்பட வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு நிறைவேற்றவில்லை என்றால் திட்டமிட்டப்படி வருகிற 26-ஆம் தேதி முதல் சென்னையில் அறவழியில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், மாவட்ட பொறுப்பாளர் குணசீலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இறுதியில் மாவட்ட பொருளாளர் முத்தமிழ்ச்செல்வி நன்றித் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!