ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு தொடங்கியது..! தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு

By Ajmal KhanFirst Published May 28, 2023, 10:47 AM IST
Highlights

நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு 73 நகரங்களில் நடைபெறுகிறது.  நாடு முழுவதும் 7 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 

சிவில் சர்வீஸ் பணி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணியில் சேர ஏராளமான இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்களுக்கான ஆண்டு தோறும் தேர்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான தேர்வு முடிவு கடந்த வாரம் வெளியாகியிருந்தது. இதில் ஏராளமான தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றிருந்தனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. 

7 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

இந்தநிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று  நடைபெற்று வருகிறது.  இத்தேர்வை எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.  அதன்படி நடப்பாண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலை தேர்வெழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 

காலை,மாலை இரு வேளை தேர்வு

தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்படுகிறது.  இரண்டு தாள்களும் காலை, மதியம் என இரு வேளைகளில் நடைபெற உள்ளது. பொது படிப்புகள் எனப்படும் ஜிஎஸ் தாளுக்கான தேர்வு காலையிலும் சிசேட் தேர்வு மதியமும் நடைபெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தேர்வர்களுக்கு பல்வேறு விதமான கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்பு.!பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

click me!