ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் சொத்துகள் முடக்கம்; கல்லால் நிறுவன வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

By SG Balan  |  First Published May 27, 2023, 11:24 PM IST

கல்லால் நிறுவன வழக்கில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


கல்லால் நிறுவன வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் கல்லால் குழு அறக்கட்டளையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலவர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான நிறுவனத்தின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணத்துக்கு 'நோ' சொன்ன சிறப்பு எஸ்.ஐ. டிஸ்மிஸ்

ரவீந்திரநாத்தின் நிறுவனத்துக்கு கல்லால் நிறுவனத்திடம் இருந்து 8.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமிழ்க் குமரனின் ரூ.15 கோடி மதிப்பிலான, தி.நகர் இல்ல சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

அண்மையில், ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஒரு மனுவை அளித்தார். தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதால், அவரை அதிமுக எம்.பி. என்ற அங்கீகரத்தை வழங்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

வேலூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த கைக்குழந்தை பரிதாப பலி

இதற்கு முன்பே கடந்த மே மாதமும் அதிமுக தரப்பில் இதே கோரிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கடிதம் எழுதிய ஓ.பி.ரவீந்திரநாத், "அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதால் இந்த கடிதத்தை ஏற்கக்கூடாது" எனக் கூறினார். தற்போது வரை ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாகவே தொடர்கின்றார்.

வடகொரியாவில் 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள் தண்டனை! வீட்டில் பைபிள் இருந்ததுதான் குற்றமாம்!

click me!