
தேனி
கஞ்சா வாங்கி வராத கைதியை, சக கைதி சரமாரியாக அடித்து உதைத்த அவலம் மதுரை மத்தியச் சிறைச்சாலையில் நடந்துள்ளது..
தேனி மாவட்டம், சின்னமனூர் ராசக்க நாயக்கனூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராஜேஷ் கண்ணன் (23).
இவர் ஒரு குற்ற வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர் வழக்கு விசாரணைக்காக தேனி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குத் திரும்பும்போது கஞ்சா வாங்கி வருமாறு, சக கைதியான மதுரை கோ.புதூரைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (34) என்பவரிடம் கூறியுள்ளார்.
ஆனால், ராஜேஷ் கண்ணன் கஞ்சா வாங்கி வர வில்லை. இதனால் கோபமடைந்த நவநீத கிருஷ்ணன் கஞ்சா கேட்டு, ராஜேஷ் கண்ணனை சரமாரியக தாக்கியுள்ளார்.
ராஜேஷ் கண்ணனின் சத்தம் கேட்டு சிறைக் காவலர்கள் ஓடிப்போய் பார்த்தனர். அப்போது, அவரை நவநீத கிருஷ்ணனிடம் இருந்து விலக்கி மீட்டனர்.
இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) தமிழ்செல்வன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்பேரில் கரிமேடு காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து நவநீத கிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.