
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு சங்கலியால் திடீர் பூட்டு போட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது.
விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் நிலையில், மத்திய அரசு இதுவரைக்கும் செவி சாய்க்கவில்லை. இதனை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இயக்குனர் கௌதமன் தலைமையில் இந்த போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்த சம்பவம் அறிந்த போலீசார் ஏராளமானோர் கத்திபாராவுக்கு நுழைந்தனர்.
இதனை தொடர்ந்து சங்கிலியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் போரட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்து வாகனங்களுக்கு வழி விடாமல் உள்ளனர் .
இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது சங்கிலியை அகற்றியதால், வாகனங்கள் மெல்ல மெல்ல நகர தொடங்கியுள்ளது.