
விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் நிலையில், மத்திய அரசு இதுவரைக்கும் செவி சாய்க்க வில்லை. இதனை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திடீரென இளைஞர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டு உள்ளனர்.
இயக்குனர் கௌதமன் தலைமையில் இந்த போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
சென்னை கத்திபாரா மேம்பாலம் மூலமாகத்தான் சென்னையை சுற்றியுள்ள பல முக்கிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியும் என்பது குறிபிடத்தக்கது
இந்நிலையில் திடீரென இந்த போராட்டம் வெடித்தால் , கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லக் கூடிய அனைத்து பேருந்துகளும் ஆங்காங்கு அப்படியே நிறுத்தப் பட்டுள்ளது.இதனால் 5 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
மேம்பாலத்தில் சங்கிலியால் பூட்டு போட்டு உள்ளதால் எந்த வாகனமும் செல்லாத அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.