நீட் தேர்வுத் தோல்வியால் மகன் தற்கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாத தந்தையும் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு அச்சம்- தொடரும் தற்கொலை
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரைவையில் மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை பல மாதங்கள் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவி ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளா். அங்கும் நீட் மசோதா மீது எந்த வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால்
நீட் தேர்வுக்கு விலக்கு கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தநிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன்(19), இவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி 200க்கும் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்துள்ளார். இதனால் மிகுந்த மன வருத்ததுடன் இருந்துள்ளார்.
தந்தை, மகன் தற்கொலை
இரண்டு முறை நீட் பயிற்சி மையத்தில் பல லட்சம் பணம் கொடுத்தும் பயனலளிக்காத நிலையில் மீண்டும் நீட் பயிற்சி எடுக்க சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று வகுப்பிற்கு செல்லாமல் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஜெகதீஸ்வரன் தந்தை செல்வமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த செல்வத்தின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு ஒரு குடும்பத்தையே பழி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்