
வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 18 லட்சத்து26 ஆயிரத்து182 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் ஆண்கள்: 3,03,95,103, பெண்கள்: 3,14,23,321, மூன்றாம் பாலினத்தவர்:7,758 இடம்பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,66,464 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதியானது உள்ளது. இந்த தொகுதியில் ஆண்கள்: 334,219, பெண்கள்: 3,32:132, மூன்றாம் பாலினத்தவர்: 113 உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1.72,211 வாக்காளர்களுடன் சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் ஆண்கள்: 89,588, பெண்கள்: 82,563, மூன்றாம் பாலினத்தவர்:60 உள்ளனர்.
வாக்காளர் சிறப்பு முகாம்
மேலும் வாக்களார் பட்டியலில் உள்ள பெயர் மாற்றம் திருத்தங்களை மேற்கொள்ள வருகிற 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.112022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக தகவல் தெரிவித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களுக்காக 15 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
15 லட்சம் பேர் நீக்கம்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இணைக்கலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் 3 கோடியே 46 லட்சம் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 83 சதவீதம் வாக்காளர்கள் அட்டையுடன் ஆதார் எண்டை இணைத்துள்ளனர். மிகக் குறைந்த அளவில் சென்னை மாவட்டத்தில் 20.4 சதவீதம் பேர் மட்டுமே ஆதாரை இணைத்துள்ளனர். பெரும்பான்மையான மாவட்டங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாகவே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மேலும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் 17 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்களுடைய வயது18 பூர்த்தி அடையும் பொழுது அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்