தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது.? தேதியை இறுதி செய்ய சென்னை வரும் இந்திய தேர்தல் ஆணையர்

By Ajmal KhanFirst Published Jan 4, 2024, 2:31 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் எந்த மாதம், எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையர்கள் வருகிற 8 ஆம் தேதி சென்னை வரவுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளோடு முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
 

நாடாளுமன்ற தேர்தல் எப்போது.?

மத்தியில் பாஜக கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு டப் கொடுக்க காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 முதல் 4 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

Latest Videos

தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக பல முறை மாநில தேர்தல் அதிகாரியோடு ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார்படுத்தி வைக்கவும், சோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆணையத்தின் சார்பாக தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 8 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீகுமார், தேர்தல் ஆணையர்கள் அனுப்சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் சென்னை வரவுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனையின் போது இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பாதுகாப்புகள் தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை ‌நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் தேதி என்ன.?

மேலும் தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பள்ளி தேர்வுகள், முக்கிய விழாக்கள் தொடர்பாக விவரங்களை கேட்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை பொறுத்து தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எந்த தேதியில் எப்போது நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதே போல பல்வேறு மாநிலங்களில் ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது. 

இதையும் படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ. 5000 வழங்கிடனும்.! ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்த எடப்பாடி

click me!