சென்னையில் அடிக்கடி சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
சென்னை அம்பத்தூர் கருக்கு பிரதான சாலை 20 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அடிக்கடி சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் கருக்கு மேனாம்பேடு பிரதான சாலையில் இன்று காலை 20 அடி ஆழத்தில் சாலையின் நடுவே திடீர் பள்ளம் ஏற்பட்டது.
undefined
இதையும் படிங்க;- நெருங்கும் பொங்கல் பண்டிகை.! இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் தெரியுமா?
இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் பள்ளத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- Today Gold Rate in Chennai : நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!
பாதாள சாக்கடை இணைப்புக்கு மேல் செல்லும் சாலையில் தேசம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரட்டூர் பட்டரவாக்கம் சாலையின் நடுவே திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டு கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.