விமான நிலையத்திற்கு நிகராக பேருந்து நிலையம்; பொங்கலுக்குள் அனைத்தும் சரியாகவிடும் - அமைச்சர் தகவல்

By Velmurugan sFirst Published Jan 2, 2024, 1:13 PM IST
Highlights

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் பொங்கல் பண்டிகைக்குள் சரிசெய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையிலுள்ள கல்யாணபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஆய்வு  செய்தனர். ஆய்வின்போது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பேசுகையில், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கல்யாணபுரத்தில் 254 குடியிருப்புகள் திறக்க தயாராக உள்ளன.

அவை தை மாதம் 1ம் தேதி முதல் பயன்பட்டாடிற்கு வருகின்றது. 9அடுக்கு மாடி, லிப்ட், ஜெனரேட்டர், 2 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன என தெரிவித்தார். மேலும் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக ஆய்வு செய்தோம். குடி நீர் குழாய், கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன. இது குறித்து வெளியான தகவல் தவறானது.

கள்ளக்காதலியை மிரட்டிய கொத்தனார் படுகொலை; விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் வெறிச்செயல்

மாநகரப் பேருந்துகளில் இறங்கி வெளி மாவட்ட பேருந்துகளுக்கு செல்பவர்களின் சிரமத்தை குறைக்க பேட்டரி கார் உள்ளது. மேலும் கூடுதல் பேட்டரி கார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நேற்று இரவு மட்டும் 10 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். புதிதாக திறக்கப்பட்ட இடம் அதில் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. மக்கள் பயன்பாட்டிற்கு வந்து 48 மணி நேரம் தான் ஆகிறது. அங்குள்ள குறைகள் 2-3 நாட்களில் சரிச்செய்யப்படும். 

பயணிகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று செய்தி வரும் அளவிற்கு பணிகள் விரைந்து முடிக்கப்படும். தனியாருக்கு ஒற்றை சாளர முறையில் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விமானநிலையம்  உள்ளிட்டவற்றை ஏற்கனவே பணி செய்கிறார்கள். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே ஆள் வைப்பதை விட குழப்பத்தை தவிர்க்க தான் தனியாருக்கு கொடுக்கபட்டுள்ளது. 2.40கோடி சி.எம்.டி.ஏ க்கு வருடம் தோறும் செலுத்துவார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது குறித்து எப்போது வேண்டுமானாலும் தகவல்களை வெளிப்படையாக கொடுப்போம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய உணவகங்களில் விலை கூடுதலாக இருக்கிறது அம்மா உணவகம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு? கிளாம்பாக்கத்தில் அம்மா உணவகம் தேவைப்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு திமுக பச்சை துரோகத்தை இழைத்துள்ளது - சீமான் காட்டம்

பொங்கல் வரையில் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கிறோம். பொங்கலுக்கு பின் பேருந்து நிலையத்தில் எந்த குறையும் இருக்காது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த பீதியை கிளப்பவேண்டாம். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தான் இத்திட்டம். விமான நிலையம் அளவிற்கு பேருந்து நிலையம் உள்ளது. கிளாம்பாக்கத்தில் 20 கோடி ஒதுக்கி இரயில் நிலையம் கொண்டு வரப்பட உள்ளது. ஆகாய நடைபாதையும் 120 கோடியில் உருவாக்கப்பட உள்ளது. நில எடுப்பு பணிகளுக்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

click me!