கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் எனப்பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

By Raghupati R  |  First Published Dec 30, 2023, 10:41 PM IST

கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (28.12.2023) காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில், விஜயகாந்த்திற்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கேப்டனுக்கு தலைமை கழகத்திலேயே மிகப் பெரிய சமாதி அமைக்கவிருக்கிறோம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நீங்கள் எல்லாரும் கேப்டன் விஜயகாந்த்திற்கு மண் எடுத்துப் போட்டு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஊருக்கே சோறுபோட்ட அவர் இல்லை என்றபோது, எங்களால் சாப்பிட முடியவில்லை. எங்களுக்கு ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் கேப்டன் முகம் தான் தெரிகிறது” என்று கூறினார்.

இந்த நிலையில், கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள், கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

click me!