சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்

Published : Feb 20, 2023, 10:29 AM IST
சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்

சுருக்கம்

ஈரோடு இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையத்தை தெரிந்து கொள்ளும் வகையில், பூத் சிலிப் வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம்77 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 1லட்சத்து 10ஆயிரத்து 934 ஆண்களும்,  1,15,987 பெண்கள், 15 திருநங்கைகள் என மொத்தம் 2,26,936 வாக்காளர்கள் உள்ளனர்.  ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதையடுத்து, 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை சரிபார்க்கும் 310 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை சோதனைகளுக்கு பிறகு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

வாக்களித்த மை காய்வதற்குள் ஈவிகேஎஸ் சென்னைக்கு ஓடி விடுவார்..! ஈரோடு மக்களை எச்சரிக்கும் அண்ணாமலை

பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

இதனையடுத்து  வாக்காளர்கள் தேர்தலின் போது தங்களது வாக்குச்சாவடியை தெரிந்து கொள்ள வசதியாக  வாக்காளர்களுக்கு நேற்று முதல் ‘பூத்சிலிப்’ வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணி வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் என 238 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, வாக்காளர்களை சரிபார்த்து, அலுவலர்கள் ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டு வருகிறது.  இதை பெற முடியாத வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு அன்று அரசு அங்கீகாரம் கொடுத்துள்ள அடையாள அட்டைகளை கொண்டு வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா என்னை அச்சுறுத்திய போது எனக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி..! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
 

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்