தமிழக அரசியல் கட்சிகளுடன் திடீர் ஆலோசனை.. அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்- காரணம் என்ன தெரியுமா.?

Published : Oct 25, 2023, 08:54 AM IST
தமிழக அரசியல் கட்சிகளுடன் திடீர் ஆலோசனை.. அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்- காரணம் என்ன தெரியுமா.?

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.   

நாடாளுமன்ற தேர்தல் தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இவிஎம் இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளை சரி பார்க்கும்படி  தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இவிஎம் இயந்திரங்கள் பரிசோதனையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மேலும் தேர்தலில் பணியாற்ற உள்ள அரசு அதிகாரிகளுக்கும் பயிற்சி முகாமும் நடைபெறுகிறது.

தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

இதன் அடுத்த கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பு பணியை தொடங்குவது  குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை ஆலோசனையானது நடைபெறுகிறது.  

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு,  புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான  சிறப்பு முகாம் நடத்துவது, அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்

முழுநேர அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி... லெப்ட் ரைட் வாங்கிய திமுக கூட்டணி கட்சி தலைவர்..!
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி