தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும்.? தேதி என்ன.? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

By Ajmal Khan  |  First Published Nov 9, 2023, 1:30 PM IST

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ர்ல மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளித்தேர்வுகளை பொறுத்து தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே ஏப்ரல் இறுதியில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. 
 


நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து  நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட்டது.  

 5 மாநில தேர்தல் அதிகாரிகளோடு ஆலோசனை

மண்டல வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை தேர்தல் ஆணையர் தர்மேந்திர ஷர்மா, மூத்த துணை தேர்தல் ஆணையர் நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர் மனோஜ்குமார் சாஹூ, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவட்சவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல்

இந்த கூட்டத்தில் முக்கியமாக 2019 நாடாளுமன்றத் தேர்தல் போல 2024 நாடாளுமன்றத் தேர்தலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகள் அட்டவணை பொறுத்து தேர்தல் அட்டவணை இறுதிச் செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பள்ளித்தேர்வு தேர்வுகள் பணிகள் முடிந்தவுடன்  தமிழகத்தில் தேர்தல் பணி நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவகையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

ED, ITயை மத்திய அரசு ஏஜென்சி என்றால் தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சி.? நீதிபதி அதிரடி சரவெடி


 

click me!