
கிருஷ்ணகிரியில், விவசாயியிடம் கத்தியைக் காட்டி ரூ.350-ஐ வழிப்பறி செய்த ஆட்டோ ஓட்டுநரை சுற்றியிருந்த மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலாளர்கள் வழிப்பறி செய்தவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த ஒரப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன் (48).
இவர் செட்டிப்பள்ளி கூட்டுச் சாலை அருகே உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, ஆனந்தன் பாக்கெட்டில் இருந்த ரூ.350-ஐ பிடிங்கிக் கொண்டு தப்பியோடிவிட்டார்.
ஆனந்தன் கத்தியதால், அந்த பகுதியில் சுற்றி இருந்த மக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர், கந்திக்குப்பம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
காவலாளர்கள் நடத்திய விசாரணையில், பிடிபட்ட அந்த இளைஞர் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி (27) என்பது தெரியவந்தது. மேலும், இவர் பல இடங்களில் இதிபோன்ற வழிப்பறிகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, காவலாளர்கள் ரவி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.