சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டி திமுகவினர் ஆர்ப்பாட்டம்; ஆதரித்து காங்கிரசாரும் பங்கேற்பு...

 
Published : Nov 23, 2017, 06:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டி திமுகவினர் ஆர்ப்பாட்டம்; ஆதரித்து காங்கிரசாரும் பங்கேற்பு...

சுருக்கம்

The DMK demonstrated the need to withdraw sugar price hike Supporting Congress and Participation ...

விழுப்புரம்

சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டி ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரசாரும் இதில் பங்கேற்றனர்.

"ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்றனர்.

அதன்படி, விழுப்புரம் நகரில் உள்ள 42 ரேசன் கடைகள் முன்பும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் தக்கா தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் சக்கரை, துணைச் செயலாளர் புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், இளைஞரணி நிர்வாகிகள் சித்திக்அலி, தயா.இளந்திரையன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொ.மு.ச. நிர்வாகி மாரிமுத்து மற்றும் காங்கிரசு கட்சி சார்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் குலாம்மொய்தீன், நிர்வாகிகள் செல்வராஜ், தயானந்தம், சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.

நகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட எருமனந்தாங்கல் பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் கோலியனூரில் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றியச் செயலாளர் தெய்வசிகாமணி தலைமையிலும், நன்னாட்டில் ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமையிலும், அத்தியூர்திருவாதியில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமையிலும், தென்னமாதேவி கிராமத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலும், தோகைப்பாடியில் ஒன்றிய பொருளாளர் காமராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும், கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க. சார்பில் பஞ்சமாதேவி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையிலும், வழுதாவூரில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையிலும், காணை ஒன்றிய தி.மு.க. சார்பில் கல்பட்டு கிராமத்தில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராஜா தலைமையிலும், நல்லாப்பாளையத்தில் ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்