தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

 
Published : Nov 22, 2017, 08:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

சுருக்கம்

cinema producer ashok kumar suicide because of meter interest problem

சுப்ரமணியபுரம் படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர் மதுரையை சேர்ந்த சசிகுமார். தயாரிப்பாளராக, இயக்குநர், நடிகர் என வளர்ந்து  சில வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். சசிகுமாரின் அலுவலகத்தில் நிறுவனத்தின் மேலாளராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார் அசோக் குமார். இவர், சசிகுமாரின் அத்தை மகன்.

அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்குக் காரணம், மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச் செழியன் என்ற அன்பு எனக் குறிப்பிட்டிருந்தார். 

அசோக் குமாருக்கு, வனிதா(38 வயது) என்ற மனைவி, சக்தி(வயது 12) என்ற மகனும், பிரார்த்தனா (வயது 9) என்ற மகளும் உள்ளனர்.

தமிழகத்தை சோக மயமாக்கியது இந்தச் சம்பவம். கந்து வட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வந்து, அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து, தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..
டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி