
நவ.27 முதல் டிச.15 வரை...வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...மழை..!
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே எதிர்பார்த்ததை விட மழை சற்று அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் நவ-27 முதல்டிச-15 வரை...வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. என்பதற்கு ஏற்ப மீண்டும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை வர உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
அதன்படி,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் 9 செ.மீ மழை பதிவானது என்பது குறிப்பிடதக்கது
மேலும் அடுத்த வாரம் உருவாக உள்ள மேலடுக்கு சுழற்சி புயலாக சின்னம் கொண்டு சில நாட்களுக்கு தொடர்மழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.