
திதியை ஏற்றுக்கொள்ளாத 'ஜெ'ஆன்மா..! ஆனால் "கோ பூஜை"..... எங்கேயோ இடிக்குதே....
ஜெ மறைந்த ஓராண்டு நிறைவு பெரும் தருவாயில் தற்போது திதி கொடுப்பதற்காக தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் இன்று காலை போயஸ் கார்டன் சென்றனர்
ஆனால் வருமானவரி சோதனை நடைபெற்றதை காரணம் காட்டி, அவர்களை உள்செல்ல காவல்துறை அனுமதிக்க வில்லை.இதனால் காவல்துறைக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வெற்றிவேல் சொன்னது என்ன ?
திதி கொடுப்பதற்காக வந்த புரோகிதர்களை கூட உள்செல்ல அனுமதிக்க வில்லை. இதற்கு மாதம் தோறும் நடைபெறும் வழக்கமான ஒன்று தான் என தெரிவித்தார்.வழக்கமாக இறந்த ஒருவருக்கு திதி கொடுக்க வேண்டும் என்றால் அது ரத்த பந்தமாக இருக்க வேண்டும்...அல்லது தான் உயில் எழுதி கொடுத்திருந்தால் அந்த நபர் திதி கொடுக்கலாம்....வாரிசு என்ற அடிப்படையில்....அல்லது சொந்தங்களாவது திதி கொடுக்கலாம் .
உதாரணம் : ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவோ அல்லது தீபக்கோ திதி கொடுக்கலாம்
ஆனால் நடந்தது என்ன ?
ரத்த சொந்தபந்தம் இல்லாத தினகரன் ஆதரவாளர்கள் வெற்றில்வேல் உள்ளிட்ட சிலர் எப்படி போயஸ் கார்டனுள் சென்று திதி கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையில் இது குறித்து கருத்து தெரிவித்த தினகரன் என்ன சொன்னார் தெரியுமா ?
அம்மா இறந்து ஒருவருட காலம் முடிவு பெரும் நிலையில்,இந்து வழக்கம் படி,திதி கொடுப்பது வழக்கம். அதற்காகத்தான் இவர்கள் முயற்சி செய்துள்ளனர்.ஆனால் வருமானவரித்துறை சோதனையை காரணம் காட்டி உள்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.ஆனால் சோதனை செய்த வருமானவரித்துறை இரண்டு அறைகளுக்கு மட்டும் தான் சீல் வைத்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.மேலும் எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி செய்கிறார்னு தெரியல என்றும் குறிப்பிட்டார்.
முரண்பாடான பேச்சி
நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால்,தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கூறும் போது," மாதம்தோறும் வழக்கமாக நடைபெறுவது தானே" என குறிப்பிட்டார்.ஆனால் தினகரனோ ஜெ மரணம் பிறகு ஓராண்டு நிறைவையொட்டி திதி கொடுக்க முயன்றதாக தெரிவித்தார்.
கோ பூஜை
சசிகலா மற்றும் அவார்களது உறவினர்கள்,நண்பர்கள்,தினகரன்வீடு என அனைத்து இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்ற போது,தினகரன் தன்னுடைய வீட்டில்,மனைவி மக்களுடன் கூலாக கோ பூஜை செய்தார்.
இங்கு என்ன ஒரு கேள்வி என்னவென்றால், திதி கொடுக்க நினைப்பவர்கள் எப்படி கோ பூஜை செய்வார்கள். அதே இந்து முறைப்படி, ஓராண்டு காலம் வரை சிலவற்றை செய்யகூடாது என வரைமுறை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
பஞ்சாங்கம் என்ன சொல்கிறது ?
இதற்கெல்லாம் முன்னதாக, ஜெ மரணித்ததாக சொல்லப்படும் டிசம்பர் 5 ஆம் தேதியை வைத்து கணக்கிட்டு பார்த்தால் இன்று திதி கொடுக்கும் நாளாக அமையவில்லை.அதற்கு பதிலாக சதுர்ச்சி நாளாக தான் உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி திதி கொடுக்க முடியும்.
இதற்கும் ஏதாவது அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்றே நினைக்க வைக்கிறது....
முடிவாக தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் போயஸ் கார்டனுள் செல்ல அனுமதிக்கவும் இல்லை....சொந்த பந்தங்கலான தீபா,தீபக் இது குறித்து வாய் திறக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது