சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை - மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு தீ வைத்து போராட்டம்...!

 
Published : Nov 22, 2017, 09:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை - மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு தீ வைத்து போராட்டம்...!

சுருக்கம்

Students are engaged in the fight against college campus.

சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவி ஆசிரியர் கண்டித்ததால் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதையடுத்து மாணவர்கள் கல்லூரி விடுதிக்குள் தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ராகமவுலிகா என்ற மாணவி பி.இ. முதலமாண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், அவர் தேர்வில் காப்பி அடிக்கும்போது ஆசிரியரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். 

இதையடுத்து ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னாலும் ராக மவுலிகாவை வெளியில் நிறுத்தி தண்டனை கொடுத்துள்ளதாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்து போன ராக மவுலிகா கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில், ராகமவுலிகாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு  தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் வன்முறையாக மாறியதால் சத்தியபாமா பல்கலையின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Tamil News Live today 25 December 2025: பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்