வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

By Ajmal KhanFirst Published Aug 28, 2022, 11:25 AM IST
Highlights

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு

தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால் இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. மதுரை, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு தற்போது வைகை அணையில் இருந்து 7 மதகு கண் வழியாக நேற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.  நீரின் வரத்தை பொறுத்து வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாகவும் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் வைகை ஆற்றின் இருகரைகளை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மெலும் யானைக்கல் தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு  ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அடுத்த 3 நாட்களுக்கு மக்களே உஷார்.. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது.!!

 

click me!