டிஎன்பிஎஸ்சி தேர்வில் இதற்கு அனுமதி இல்லையா..? உடனே திருத்தம் செய்ய வேண்டும்... அலறி துடிக்கும் அதிமுக

By Ajmal Khan  |  First Published Aug 28, 2022, 10:11 AM IST

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில், தமிழ் நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழையும் அங்கீகரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் வலியுறுத்தியுள்ளார்.


மாணவர்கள் தகுதி இல்லையா..?

டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு தொடர்பாக  முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 29.7.2022 அன்று அறிவித்த விளம்பர எண். 622, அறிவிப்பு எண். 18/2022-ன்படி, தமிழ் நாடு அரசுத் துறைகளில் 1089 சர்வேயர் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில் கல்வித் தகுதியாக, இந்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை (NCVT National Council for Vocational Trading) பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பால், தமிழ் நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பதவிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆகியுள்ளார்கள்.தமிழ் நாட்டிலே படித்து, தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை (SCVT - State Council for Vocational Trading) பெற்றிருக்கின்ற தமிழக இளைஞர்களை, மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆக்கியுள்ளது. தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிக்கை. 

Tap to resize

Latest Videos

சமூக நீதி ஆட்சியென வாய்கிழியப்பேசிவிட்டு... அடைக்கலம் தேடி வந்த மக்களை ஒடுக்குவது தான் விடியல் ஆட்சியா-சீமான்

திருத்தம் செய்ய வேண்டும்

எனவே, சர்வேயர் பணியிடங்களுக்காக தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்தும்: தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற (SCTV - State Council for Vocational Trading) அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களாக திருத்தம் செய்தும், புதிய அறிவிப்பினை வெளியிடுவதற்கு விடியா திமுக அரசு உரிய ஆலோசனையை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்குமாறு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் அரசு வேலைக்காக ஏங்கித் தவிக்கின்ற இன்றைய காலச் சூழ்நிலையில், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் நடத்துகின்ற தேர்வுகளை மிகுந்த கவனத்தோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிடுமாறு ஓ.எஸ் மணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அமைச்சர்களின் முகம் சுளிக்கும் பேச்சு...! மெளனத்துடன் கடந்து செல்லப் போகிறாரா முதலமைச்சர்... ஆர்.பி உதயகுமார்

 

click me!