சென்னை அமைந்தகரையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு பாரதிராஜாவை அவர் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு பாரதிராஜாவை அவர் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாரதிராஜா நல்ல உடல்நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில்,’ மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சையால் நலம்பெற்று வருகிறேன்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
பூரண குணமடைந்து விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்றும் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது பாரதிராஜாவின் மனைவியிடம் தொலைபேசியில் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!