
குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தும் ஏற்படுத்தியது தொடர்பாக நடிகர் ஜெய்க்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பார்ட்டி படப்பிடிப்பு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு அதிகாலை காரில் சென்றார் நடிகர் ஜெய். அவர் சென்ற கார் நிலை தடுமாறி அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என்பது தெரியவந்ததால், போலீஸார் அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது, போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலருக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்க நடிகர் ஜெய்க்கும் நோட்டீஸ் அனுப்புப்பட்டுள்ளது.